சிறுவர் தினம் உலகின் பல நாடுகளில் ஆண்டுதோறும் வெவ்வேறு நாட்களில் விடுமுறை நாளாகவும் சிறப்பு நாளாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
சிறுவர் தின விழாவானது 1856 ஆம்ஆண்டு ஜுன் மாதம் சார்லஸ் லியோனர்டு என்ற பாதிரியாரால் தொடங்கப்பட்டது ஆகும். அவர் குழந்தைகளுக்கு சிறப்பான சேவை செய்வதற்கான ஒரு நாளை ஏற்படுத்தினார். தொடக்கத்தில் அதற்கு பூக்கள் ஞாயிறு என பெயர் இருந்தது பின்னர் சிறுவர் தினம் என பெயர் மாற்றப்பட்டது
அனைத்துலக சிறுவர் தினம் டிசம்பர் 14 1954 இலிருந்து ஐக்கிய நாடுகள் மற்றும் யுனிசெஃப் அமைப்புக்கள் ஆண்டு தோறும் நவம்பர் அன்று கொண்டாடுகின்றன. உலகெங்கணும் உள்ள குழந்தைகளுக்கிடையே புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக இந்நாள் ஐநா அவையினால் பிரகடனப்படுத்தப்பட்டது.அத்துடன் குழந்தைகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான பல பொதுநலத் திட்டங்களை உலகெங்கும் நடத்துவதற்கும் இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
உலக சிறுவர் தினமும் முதியோர் தினமும் இலங்கையில் ஒரே தினத்தில் அதாவது ஒக்டோபர் முதலாம் திகதி கொண்டாடப்படுகின்றன.
ஒரு சொல் பேச்சிலே உள்ளம் மகிழ வைத்து கள்ளமில்லா சிரிப்பினிலே நெஞ்சம் நெகிழ வைக்கும் மழலைகளுக்கு மலையக குருவி சார்ப்பான சிறுவர் தின வாழ்த்துக்கள்