சிறுவர், பெண்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வன்முறைகளுக்கு எதிராக திருமலையில் போராட்டம்

சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வன்முறைகளுக்கு எதிராக திருகோணமலை- அனுராதபுர சந்தியில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலை பெண்கள் குழுக்களின் ஒன்றிணைவுடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்றின் பின்னராக சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வன்முறைகள் அதிகரித்து உள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் இவ்வாறு வன்முறைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Articles

Latest Articles