‘சிறைச்சாலையில் மலசலக்கூடங்களை கழுவும் ரஞ்சன் ராமநாயக்க’

சிறைச்சாலைக்குள் ரஞ்சன் ராமநாயகவை  மலசலகூடங்களை சுத்தம் செய்யுமாறு பணித்துள்ளனர். மிகவும் மோசமாக ரஞ்சன் ராமநாயகவை நடத்துகின்றனர். அவருக்கு அரசாங்கம் அநியாயம் செய்கின்றது என எதிர்க்கட்சி உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இன்று நாம் எதிர்க்கட்சியில் உள்ளோம். ஆனால் நாளை நாம் ஆட்சிக்கு வந்ததும் நாமும் இவ்வாறே செயற்பட்டால், இன்று ஆளும் கட்சியில் உள்ள எத்தனை பேர் சிறைக்கு செல்லவேண்டி வரும் என சிந்தித்துப்பாருங்கள்.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக நீதிமன்றத்தை அவமதித்ததை நாம் நியாயப்படுத்தவில்லை. அதேபோல் இவர்கள் அனைவரும் கள்ளர்கள் என அவர் கூறினாலும் யார் என நேரடியாக எவரையும் சுட்டிக்காட்டவில்லை. அதுமட்டுமல்ல எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் சிறையில் அடைக்கப்படுவதை நாம் விரும்பவில்லை. கொலை செய்திருந்தால், கொள்ளையில் ஈடுபட்டிருந்தால், தவறு செய்திருந்தால் அவர்களை தண்டிக்க வேண்டும். அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

எனவே ரஞ்சன் ராமநாயகவிற்கு நியாயத்தை பெற்றுக்கொடுங்கள். அவரை விடுதலை செய்யவேண்டும் என வலியுறுத்தவில்லை. அவருக்கான பாராளுமன்ற வாய்ப்பை பெற்றுக்கொடுங்கள் என்றார்.

Related Articles

Latest Articles