சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் கைது!

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல் தெனிய கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலமளிப்பதற்காக சென்றிருந்த சந்தர்ப்பத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல் தெனியவை பணிநீக்கம் செய்வதற்கு நேற்று கூடிய அமைச்சரவை தீர்மானித்திருந்தது.

ஜனாதிபதி பொது மன்னிப்பை சட்டவிரோதமாக பயன்படுத்தி கைதிகள் விடுதலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

Related Articles

Latest Articles