ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், கைது செய்யப்பட்டு, சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள போராட்டக்காரர்களை ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க இன்று சந்திக்கவுள்ளார்.
அவரும், ஜே.வி.பியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத்தும் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெலிக்கடை சிறைச்சாலை செல்லவுளளனர்.