சீனாவின் ஆசியுடன் இலங்கையில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி!

” சினோவெக் என்ற கொரோனா தடுப்பூசி இன்னும் இரண்டு மாதங்களுக்குள் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும். இலங்கை மற்றும் சீனாவின் கூட்டு உற்பத்தி நடவடிக்கையாக இது அமையும்.” – என்று இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன நேற்று தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” சினோவெக் என்ற கொரோனா தடுப்பூசி தற்போது சீனாவில் உற்பத்திசெய்யப்படுகின்றது. இதனை இலங்கையில் உற்பத்தி செய்வது தொடர்பில் சில மாதங்கள் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. பேச்சுகள் வெற்றியளித்துள்ளன.

இதன்பிரகாரம் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் இலங்கை – சீன கூட்டு நடவடிக்கையாக சினோவெக் தடுப்பூசியை இலங்கையில் உற்பத்தி செய்யமுடியும் என எதிர்ப்பார்க்கின்றோம். கண்டி, குண்டசாலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்சாலையில் இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.” – என்றார்.

Related Articles

Latest Articles