சீனாவின் கொரோனா தடுப்பூசிகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

சீனாவின் Sinopharm கொரோனா தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.சீன அரசாங்கத்தின் நன்கொடையாக 6 இலட்சம் தடுப்பூசிகள் நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்த தடுப்பூசிகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் இலங்கைக்கான சீன தூதுவர் Qi Zhenhong கையளித்தார்.

நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ள தடுப்பூசிகளை முதலில் இங்கு வசிக்கும் சீன பிரஜைகளுக்கு ஏற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இலங்கையில் தொழிலுக்காக வருகை தந்துள்ள 4,500 சீன பிரஜைகளுக்கு முதற்கட்ட Sinopharm தடுப்பூசிகளை ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், Sinopharm தடுப்பூசியை நாட்டினுள் பயன்படுத்துவதற்கு அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் அனுமதி இதுவரை கிடைக்கவில்லை.

இதேவேளை, கொரோனா தடுப்பூசி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை எதிர்வரும் 19 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles