சீனாவில் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் அதிருப்திப் போக்கு

சீனாவில் பொருளாதார இழப்பு இருந்தபோதிலும், சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கான கோரிக்கைகள், அங்குள்ள இளைஞர்களிடையே அதிருப்தியை தூண்டுகிறது. அரசின் தணிக்கை மற்றும் அடக்குமுறையை மீறி, சீன இளைஞர்களிடையே அதிருப்தி, ஆன்லைனிலும் பல்கலைக்கழக வளாகங்களிலும் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான எதிர்ப்புக்கள் அரசாங்கத்தின் கனமான அரசியல் கட்டுப்பாட்டிற்கு எதிராகவும் பேச்சு சுதந்திரத்தை முடக்குவதற்கு எதிராகவும் உள்ளன.

இந்த அதிருப்திக்கான தோற்றப் புள்ளிகளாக பல்கலைக்கழகங்கள் காணப்படுகின்றன. தற்போதைய ஆட்சிக்கு எதிராக அதிகரித்து வரும் முதலாளித்துவ எதிர்ப்பு மீம்ஸ் மற்றும் ஆன்லைன் கருத்து வேறுபாடுகள் சீன இளைஞர்களிடையே எழும் ஆத்திரத்தையும் வெறுப்பையும் சுட்டிக்காட்டுகின்றன. அதிருப்தியடைந்த இளைஞர்களின் கூற்றுப்படி, சீனாவில் கூட தொழிலாள வர்க்கத்தின் கடின உழைப்பால் முதலாளித்துவ வர்க்கம் மட்டுமே வளம் பெறுகிறது.

சீனாவில், நகர இளைஞர்களை விட கிராமப்புற இளைஞர்கள் பின்தங்கிய நிலையில் உள்ளனர். பள்ளிகளின் தரம் மற்றும் கணினி அணுகல் ஆகியவை நகரங்களை விட குறைவாக உள்ளன. தாழ்மையான பின்னணியைச் சேர்ந்த இளம் சீனர்களில் பலர், ஒருவருக்கொருவர் அனுதாபம் காட்ட ‘சிறிய நகர சோதனை இயந்திரங்கள்’ (small-town test machines) என சுய-கேலி மீம்ஸ்களுடன் ஆன்லைன் குழுக்களில் ஒன்றிணையத் தொடங்கியுள்ளனர்.

இந்த குழுக்கள் அரசாங்கத்தின் தணிக்கை நடவடிக்கையால் மூடப்படுவதற்கு முன்பாக பல்லாயிரக்கணக்கான உறுப்பினர்களை ஈர்த்தன. எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையற்ற மீம்ஸ்கள் இப்போது சமூக ஊடகங்களில் பொதுவாக காணப்படுகின்றன. ‘சீவ்ஸ்’ போன்ற மீம்ஸ்கள் சீன இளைஞர்கள் நாட்டில் முதலாளிகளால் சுரண்டப்படுவதைப் பற்றிய விரக்தியைக் குறிக்கிறது.

‘Lie Flat’ போன்ற குழுக்களில் உள்ளோர், தற்போதைய சமூகத்தின் மீதான இளைஞர்களின் வெறுப்பை அம்பலப்படுத்துவதோடு, சிறிய வருமானத்தை அளிக்கும் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மோசமாக்கும் வேலைகளை கைவிட முடிவு செய்துள்ளனர். பொருளாதார மந்தநிலை காரணமாக இளைஞர்களிடையே வேலையில்லாத் திண்டாட்டம் 20% க்கும் அதிகமாக அதிகரித்திருப்பது இளைஞர்களிடையே ஏமாற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது.

ஏழ்மையில் வாழ்ந்த Kong Yiji என்ற தோல்வியுற்ற அறிஞரின் புகழ்பெற்ற சிறுகதையின் வைரலான மீம் மூலம் பட்டதாரிகளின் இருண்ட எதிர்காலத்தைக் குறித்த ஏமாற்றம் வெளிப்படுத்தப்படுகிறது. 800 சுயவிவரங்களை (resume) வீணாக அனுப்பியதை வெளிப்படுத்தும் சீன பட்டதாரி ஒருவரின் கண்ணீரின் வீடியோ சீன சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மீம்ஸ்களுக்கு மேலதிகமாக, இளைஞர்கள் அதிகாரிகளை நேரடியாகவோ, வெளிப்படையாகவோ அல்லது ஆன்லைனிலோ எதிர்கொள்வதும் அதிகரித்து வருகிறது, இது சீனாவில் அசாதாரணமாக பார்க்கப்படுகிறது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் கடுமையான தணிக்கை ஆட்சிக்கு எதிராக மாணவர்கள் வெளிப்படையாக வெற்று வெள்ளைத் தாள்களை ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஜியாங்சு மற்றும் ஜெஜியாங் மாகாணங்களைச் சுற்றியுள்ள பல பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர்கள் கடந்த ஆண்டு பல்கலைக்கழகங்களின் நிலையை ‘தொழில்முறைப் பள்ளிகள்’ நிலைக்குத் தள்ளும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிராக போராட்டங்களைத் தொடங்கினர், இதனால் அவர்கள் பெற்ற பட்டங்களின் மதிப்பு குறைக்கப்பட்டது. முடக்கல் நடவடிக்கைகளின் போது தங்கள் பள்ளிகளால் லாபம் ஈட்டும் முயற்சிகளுக்கு எதிராக அவர்கள் தன்னிச்சையாக போராட்டங்களைத் தொடங்கினர்.

ஜனநாயகம், பேச்சு சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி மற்றும் சீன மக்களுக்கு அரசாங்கம் பொறுப்புக்கூறல் ஆகியவற்றைக் கோரி வெளிநாடுகளைச் சேர்ந்த சீன மாணவர் ஆர்வலர்களால் China Deviants என்ற கூட்டு நிகழ்வு உருவாக்கப்பட்டது. சீன செயல்பாட்டாளர்கள், ஒடுக்கப்பட்ட மற்றும் உள்நாட்டில் பேச அனுமதிக்கப்படாதவர்கள் ஒன்று கூடி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக ஒரு கூட்டுப் பிரச்சாரத்தைத் தொடர, சைனா டிவியன்ட்ஸ் ஆஃப்லைன் தளமாக இருப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

சீனாவில் இளைஞர்களின் சமூக ஊடகப் பதிவுகள் மற்றும் வெளிப்படையான எதிர்ப்புகள், ஷி ஜின்பிங்கின் தேசியவாத ‘சீனா கனவு’ மீது இளைஞர்கள் நம்பிக்கை இழந்து வருவதைக் குறிக்கிறது.

ஒரு கணக்கெடுப்பின்படி, சுமார் 25% பல்கலைக்கழக மாணவர்கள் படிப்பு, வேலை வாய்ப்பின்மை மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக மனச்சோர்வடைந்துள்ளனர். சீனாவின் தற்போதைய தலைமுறை இளைஞர்கள் அனைத்து வயதினரையும் விட மிகவும் அவநம்பிக்கை கொண்டவர்களாக உள்ளனர், ஏனெனில் அவர்கள் சம்பாதிக்கும் சக்தியை சுருக்கியுள்ள பொருளாதாரத்தை அவர்கள் அனுபவிக்கின்றனர்.

பொதுவாக சமூக இயக்கங்களின் ஆதாரமாக இளைஞர்கள் இருப்பதால், சமூக ஸ்திரத்தன்மை மற்றும் அமைதியைப் பேணுவதற்கு அரசாங்கம் அதிகம் செயற்பட வேண்டியிருக்கும். அதிகரித்து வரும் விரக்தி மற்றும் ஏமாற்றத்துடன், இளைஞர்கள் தாங்கள் குரல் கொடுக்க சீர்குலைவான வழிகளை எடுத்து வருகின்றனர்.

வரவிருக்கும் ஆண்டுகளில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி கீழே இருக்கும் நிலையில், விரக்தியடைந்த இளைஞர்கள் சீனாவின் சமூக ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் விளைவிக்கலாம்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles