சீனாவில் உள்ள “வெள்ளை குதிரை” விகாரை வளாகத்தின் இலங்கை விகாரை மண்டபத்தின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும்

சீனாவின் முதல் பௌத்த விகாரையாக கருதப்படும் ஹினன் மாகாணத்தில் உள்ள “வெள்ளை குதிரை ” (சுது துரங்க) விகாரை வளாகத்தில் இலங்கை பாரம்பரிய கட்டிடக்கலை அம்சங்களைப் பிரதிபலிக்கும் வகையில் விகாரை மற்றும் ஸ்தூபி அமைக்கும் பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பீஜிங்கில் “வெள்ளை குதிரை” (சுது துரங்க) விகாரையின் விகாராதிபதி வண. யின் லீ தேரர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையில் நேற்று (19) இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமராக இருந்த காலத்தில் “வெள்ளை குதிரை ” (சுது துரங்க) விகாரை வளாகத்தில் இலங்கை விகாரை மண்டப நிர்மாணப் பணிகளை நடைமுறைப்படுத்துவதற்கு அப்போதைய சபாநாயகர் கரு ஜயசூரியவினால் அடிக்கல் நடப்பட்டது.

ஆனால், அதன் பின்னர் அதன் பணிகள் மேற்கொள்ளப்படாத நிலையில் மீண்டும் அந்தப் பணிகளை ஆரம்பிக்குமாறும், விகாரை மண்டபத் திட்டங்களை புதிதாக தயாரிக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.

பாஹியன் பிக்குவினால் இலங்கையிலிருந்து சீனாவிற்கு கொண்டு வரப்பட்ட பௌத்த பாலி நூல்களின் பிரதிகளை இந்த விகாரையில் வைப்பதற்காக இந்த விகாரை மண்டபம் இலங்கையினால் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles