‘சீனாவில் ஏலத்துக்கு செல்லும் உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல்’

இரத்தினபுரியில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய நீல இரத்தினக்கல்லை, உரிமையாளரின் விருப்பத்துடன் சர்வதேச ஏலத்தில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது என்று இரத்தினக்கல் மற்றும் இரத்தினக்கல் சார்ந்த தொழில்துறை இராஜாங்க அமைச்சர் லோஹான் ரத்வத்த தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட  இரத்தினக்கல்லுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த இரத்தினக்கல்லை விற்பனை செய்வதற்கு முன்னர் அதன் பெறுமதியை கணிப்பிட வேண்டியுள்ளது.

குறிப்பாக சீனாவின் இரத்தினக்கல் ஏலம் எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், குறித்த இரத்தினக்கல்லை அந்த ஏலத்தில் விற்பனை செய்ய எதிர்ப்பார்க்கின்றோம்.

இரத்தினக்கல் விற்பனை செய்யப்படும் தொகையில், 10 வீதம் அரசாங்கத்திற்கு உரித்தாகும்.

நாட்டில் நிதி தொடர்பிலான பிரச்சினை காணப்படுகின்ற இந்த சந்தர்ப்பத்தில், இவ்வாறான கல் ஒன்று கிடைக்கின்றமை அதிஷ்டமானது.

Paid Ad
Previous article53 பேருக்கு கொரோனா – முடக்கப்பட்டது நீட்வூட் தோட்டம்!
Next articleமவுன்ன்ஜீன் தோட்ட ஆற்றுப்பள்ளத்தாக்கில் மாணிக்கக்கல் அகழ்வுக்கு மக்கள் போர்க்கொடி