சீன வெளிவிவகார அமைச்சர் Qin Gang, அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சீன அரச ஊடகம் இத் தகவலை நேற்று உறுதிப்படுத்தியுள்ளது.
சீன வெளிவிவகார அமைச்சர் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக பொது வெளியில் தலை காட்டவில்லை. இதனால் அவர் தொடர்பில் பல கோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவந்தன.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அவர் பதவி நீக்கப்பட்டுள்ளார் என இன்று தகவல் வெளியாகியுள்ளது. சீன அரச ஊடக தகவலின் பிரகாரம், Qin Gang இற்கு பதிலாக Wang Yi நியமிக்கப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது.
சீனாவின் உயர்மட்ட சட்ட சபையான தேசிய மக்கள் காங்கிரஸ் நிலைக்குழுவின் சிறப்பு அமர்வில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. பதவி நீக்கப்பட்டதற்கான உரிய காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
பதவி நீக்கப்பட்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சர், அமெரிக்காவுக்கான சீன தூதுவராகவும் பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.