மாத்தறை உட்பட நாட்டில் 12 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 13 ஆயிரத்து 27 குடும்பங்களைச் சேர்ந்த 53 ஆயிரத்து 399 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
வெள்ளம், மண்சரிவால் காற்றால் ஐந்து வீடுகள் முழுமையாகவும், 720 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.
அறுவர் உயிரிழந்துள்ளதுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.
381 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 556 பேர் 16 பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
சீரற்ற காலநிலையால் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 42 ஆயிரத்து 682 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்து மாத்தறை மாவட்டம், சீரற்ற காலநிலையால் நேற்றும், இன்றும் அம்மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.










