சீரற்ற காலநிலையால் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு!

அம்பாறை உட்பட நாட்டில் 9 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 53 ஆயிரத்து 641 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 312 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம், மண்சரிவால் 12 வீடுகள் முழுமையாகவும், 288 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.

2 ஆயிரத்து 659 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 351 பேர் 48 பாதுகாப்பு மத்திய நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலையால் அம்பாறை மாவட்டத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த மாவட்டத்திலேயே ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 504 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles