சீரற்ற காலநிலையால் 55, 561 பேர் பாதிப்பு! 131 வீடுகள் சேதம்!!

நுவரெலியா, பதுளை உட்பட நாட்டில் 11 மாவட்டங்களில் நிலவும் கடும் காற்று மற்றும் பலத்த மழையுடனான வானிலையால் 15,713 குடும்பங்களைச் சேர்ந்த 55, 561 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகாணத்திலேயே அதிகளவிலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் 43, 623 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு வீடு முழுமையாகவும், 131 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.
1,731 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். 22 இடைத்தங்கள் முகாம்களில் அவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles