சீரற்ற காலநிலை 3,058 பேர் பாதிப்பு: 254 வீடுகள் சேதம்!

நாட்டில் 12 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 877 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் எழுவர் காயமடைந்துள்ளனர்.

மண்சரிவு , மரம் முறிவு மற்றும் வெள்ளம் உள்ளிட்ட அனர்த்தங்களாலேயே உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
4 வீடுகள் முழுமையாகவும், 250 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.

சீரற்ற காலநிலையால் 33 குடும்பங்களைச் சேர்ந்த 104 பேர் மூன்று தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, அடுத்து சில நாட்களுக்கு சீரற்ற காலநிலை தொடரும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles