இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள சுசில் பிரேமஜயந்தவுக்கு, இராஜாங்க அமைச்சர் நிமல் லங்சா, இராப்போசன விருந்து ஒன்றை வழங்கியுள்ளாரென தகவல் வெளியாகியுள்ளது
கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இந்த இராப்போசனம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது எதிர்கால அரசியல் நகர்வுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவும், அரசின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்துவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
