அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை வலியுறுத்தியும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று போராட்டத்தை முன்னெடுத்தன.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதல்வரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான விக்னேஸ்வரன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் எம்.பிக்கள் உட்பட எதிரணி எம்.பிக்கள் பங்கேற்றிருந்தனர்.










