சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்ரீதலதா மாளிகையில் ஜனரஜ பெரஹரா

இலங்கையின் 75ஆவது சுதந்திர விழாவுடன் இணைந்ததாக எதிர்வரும் பெப்ரவரி 18 ஆம் திகதி குடியரசு வீதி உலாவொன்றினை (ஜனரஜ பெரஹர) நடாத்த ஸ்ரீதலதா மாளிகை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதற்கான பூர்வாங்க கலந்துரையாடல் அண்மையில் கண்டி ஸ்ரீதலதா மாளிகையில் இடம்பெற்றது.

மேலும் அரசாங்கத்தின் வேண்டுதலுக்கிணங்க மிகவும் சிறப்பு வாய்ந்த விசேட சந்தர்ப்பங்களில், இவ்வாறு குடியரசு வீதி ஊர்வலங்கள் பல சந்தர்ப்பங்களில் தலதா மாளிகையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக​ தியவதன நிலமேபிரதீப் நிலங்க தேலா தெரிவித்தார்.

இந்த அணிவகுப்பில், குடியரசுக்கொடி யானைகளுடன் ஊர்வலமாக பல தெருக்களில் கொண்டு செல்லப்படுகிறது.

Related Articles

Latest Articles