‘சுதந்திர தினம் கரிநாளாக பிரகடனம்’ – யாழில் போராட்டம்!

இலங்கை சுதந்திர தினமான இன்றைய நாளை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவினர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் இடம்பெற்றது.

தமிழ் இனப்படுகொலைக்கான சர்வதேச நீதி விசாரணையை நடத்து, வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி, அரசியல் கைதிகளை நிபந்தனை இல்லாமல் விடுதலை செய், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு போன்றவற்றை வலியுறுத்தி இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பியவாறு யாழ்ப்பாணம் முனியப்பர் கோவில் பகுதி வரை பேரணியாக சென்று அங்கும் போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles