ஆட்சி, வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் உறவுகளை வளர்ப்பதற்கான வழிகளை ஆராய்வதற்காக அமெரிக்காவிலிருந்து இரு தரப்பு காங்கிரஸ் உறுப்பினர்களையும் கொண்ட் அலுவலர்கள் குழு ஒன்று இலங்கைக்கு வருகை தந்து இலங்கை அரசுத் தரப்பு உட்பட பல் தரப்பினருடனும் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றது.
இந்தக் குழுவினர் இன்று தமிழ் பேசும் மக்களின் மூன்று தலைவர்களைக் கொழும்பில் சந்தித்துப் பேசினர்.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி., ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளர் நிஸாம் காரியப்பர் எம்.பி., இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருடனேயே அந்தக் குழுவினர் விரிவான பேச்சுகளில் ஈடுபட்டனர்.