சுமார் 8,000 ஆண்டுகளுக்கு முன்னரே உப்பை பதப்படுத்திய மக்கள்!

நீரில் தோன்றி, நீரிலேயே கரைந்து போகும் உப்பு ஜீவாத்மாவைப் போன்றது. கடலே பரமாத்மா என்றெல்லாம் உப்பு போற்றப்படுகிறது.

உப்பு, கடவுளை உணர்த்தும் ஓர் அடையாளம் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது. சங்கும் முத்தும் பிறப்பது உப்பால்தான்.

வீட்டில் திருஷ்டி இருந்தால் முதலில் உப்பை நீரில் போட்டு வீட்டின் மையத்தில் இருக்குமாறு வைப்பார்கள். 3 நாட்கள் கழித்து யாரும் கால்பாடாத இடத்தில் கொண்டு போய் ஊற்றிவிடுவார்கள்.

குழந்தைகளுக்கு கண் திருஷ்டி இருந்தால் உப்பை கொண்டு சுற்றிப்போடுவார்கள். உப்பு துர்சக்திகளை, கெட்ட அதிர்வுகளை விரட்டும் ஆற்றல்கொண்டது என தமிழர்கள் நம்புகிறார்கள்.

கடலில் இருந்து தோன்றிய மகாலட்சுமியின் அம்சமாக ‘உப்பு’ சொல்லப்படுகிறது. `உப்பைச் சிந்தக் கூடாது’, “உப்பை மிதிக்கக்கூடாது“ என்று நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

  • சுமார் 8,000 ஆண்டுகளுக்கு முன்னரே உப்பை பதப்படுத்தும் வழக்கம் மக்களிடையே இருந்து வந்துள்ளது.
  • உருமேனியா நாட்டின் ஒரு பகுதியில் வாழ்ந்த மக்கள் ஊற்று நீரை கொதிக்க வைத்து உப்பை பிரித்தெடுத்துள்ளனர்.
  • சீனாவிலும் இதே காலகட்டத்தில் உப்பு-உற்பத்திப் பணிகள் நிகழ்ந்திருக்கிறது.
  • பண்டைய எபிரெயர்கள், கிரேக்கர்கள், ரோமர்கள், பைசானியர்கள், எகிப்தியர்கள், மற்றும் இந்தியர்கள் போன்ற நாட்டினர் உப்பை பரிசளிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். மத விழாக்களிலும் பிற கலாச்சார நிகழ்வுகளிலும் உப்பு முக்கியத்துவத்தைப் பெற்றது.
  • சாதாரண உப்பு என்பது நம் உணவில் பயன்படுத்தும் உப்பை குறிக்கும். இது சோடியம் குளோரைடு என்று அழைக்கப்படுகிறது.
  • உப்பு அதிகமாக பயன்படுத்தினால் உடல் பிரச்சினைகளும் வரும். எனவே, உப்பை குறைந்த அளவே பயன்படுத்தினால் நல்லது.
  • ஒருவருக்கு உப்பின் தேவை என்பது அவரின் உடல் வெளியிடும் சோடியத்தின் அளவைப் பொருத்து அமைகிறது.
  • அதிக உப்பு உணவில் சேர்த்து சாப்பிட்டால் நரம்பு மண்டலத்தையும், தசைகளின் ஆற்றலையும் தடுக்கும்.
  • உடலுக்குத் தேவையான கால்சியம் சத்துகள் எலும்பில்தான் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சோடியமானது எலும்பில் இருக்கும் கால்சியத்தை உறிஞ்சி விடும். அது சிறுநீர் வழியாக சோடியம் வெளியேறும்போது கால்சியமும் வெளியேறிவிடுகிறது. இதனால் எலும்பு அரித்து எலும்புப்புரைகள் உருவாகுகிறது.

Related Articles

Latest Articles