சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக புதிய App

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும்போது இந்நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக புதிய கையடக்கத் தொலைபேசி செயலியொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

சுற்றுலாத்துறை மற்றும் காணி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அமைச்சரின் தலைமையில் நாடாளுமன்றத்தில் கூடிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் சுற்றுலாத்துறையின் மேம்பாடு தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள மற்றும் எதிர்பார்க்கப்படும் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கும் போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டதுடன், ஜனவரி முதல் இந்தக் கையடக்கத் தொலைபேசிச் செயலியை பயன்படுத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

அதேபோன்று, இந்த செயலி மூலம் சுற்றுலாப் பயணிகள் விரும்பினால் அவர்கள் இருக்கும் இடத்தை நோக்குவதற்கு அனுமதி வழங்குதல், அவர்கள் தொலைந்து போனால் அல்லது எதாவது பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டி ஏற்பட்டால் அதன்மூலம் அதனை மேற்கொள்ள முடியும் என அமைச்சர் விளக்கமளித்தார்.

மேலும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக சுற்றுலாப் பயணிகளை கவரும் ஒவ்வொரு கடற்கரைப் பகுதிகளிலும் சுற்றுலா பொலிஸ் அணியொன்றை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

விசேடமாக 2023 இல் 15 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை வரவழைக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஹரின் பிரனாந்து இதன்போது தெரிவித்தார்.
அதேபோன்று, காணி அளவிடும் நடவடிக்கைகள் தாமதமடைவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், இந்த அளவிடும் பணிகளை வெளித் தரப்பினரைக் கொண்டு மேற்கொள்ள முடியுமா என பரிசீலித்து விரைவில் இந்த அளவிடும் பணிகளை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் தெரிவித்தார். இது தொடர்பான அறிக்கையொன்றை அடுத்த குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறும் அமைச்சர் பரிந்துரைத்தார்.

இவற்றுக்கு மேலதிகமாக, பல்வேறு மாவட்டங்களில் காணப்படும் காணிகள் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles