சுற்றுலா வலயமாகிறது இறுதிப்போர் நடந்த நந்திக்கடல் களப்பு

இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடைபெற்ற நந்திக்கடல் களப்பு பகுதியை சுற்றுலா தளமாக மாற்றுவதற்கான வேலைத்திட்டம் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இலங்கையில் கடற்பகுதிகளில் உள்ள கவர்ச்சியான இடங்களை கண்டறிந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை கவரக்கூடிய வகையில் அவற்றை சுற்றுலா பிரதேசங்களாக மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டம் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்படி 24 கடற் பிரதேசங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றுள் நந்திக்கடல் கடற்பகுதியும் உள்ளடங்கியுள்ளது.

இப்பகுதிகளை சுற்றுலா பிரதேசமாக மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அரச நிறுவனங்கள், தனியார் முதலீடுகளை உள்ளடக்கிய வகையிலேயே இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

புத்தளம் களப்பு, குடவ, வாடிய, வைக்கால, நீர்கொழும்பு களப்பு, ப்ரீத்திபுர, கொக்கல களப்பு, கிரிந்த, எலிபன்ரொக், உப்புவெளி, சாம்பல்தீவு பீச், மற்றும் நாயாறு பீச் மற்றும் நந்திக்கடல் களப்பும் இதில் உள்ளடங்குவதாக அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles