சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி பலி – இறத்தோட்டையில் சோகம்!

மாத்ளை, இறத்தோட்டையில் நேற்று மாலை சுவர் இடிந்து விழுந்ததில் 82 வயதான மூதாட்டி ஒருவர் பலியாகியுள்ளார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக அடிப்படை வசதியற்ற ஆபத்து மிகுந்த வீட்டில் 9 பேர் வசிந்து வந்துள்ளனர்.

சுவர் ஓரமாக உறங்கிக்கொண்டிருந்த நால்வர் அனர்த்தத்தில் சிக்கியதுடன், அவர்களுள் மூவர் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

சடலம் இறத்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை இறத்தோட்டை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Related Articles

Latest Articles