சுவீடனில் இடம்பெற்றுள்ள பயங்கர துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 10 பேர் பலியாகியுள்ளனர்.
சுவீடனில், ஸ்டாக்ஹோமில் இருந்து சுமார் 200 கிலோ மீற்றர் தொலையில் உள்ள ஓரேப்ரோ என்னும் இடத்தில் ரிஸ்பெர்க்ஸ்கா
ஸ்கூல் என்ற கல்வி நிறுவனம் உள்ளது.
பாடசாலை கல்வியை முறையாக முடிக்காத மாணவர்களை உயர்கல்விக்கு தயார்படுத்துகிறது இப்பாடசாலை.
குறித்த பாடசாலைக்குள் செவ்வாய்க்கிழமை நுழைந்த மர்மநபர் ஒருவர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் உயிரிழந்தவர்களில் தாக்குதல் நடத்திய நபரும் இருக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். எனினும் தாக்குதல் நடத்தியவர் யார், அவரின் நோக்கம் என்ன? ஆகியவை குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தனிநபர் நடத்திய தாக்குதலாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம் என்றும், இது தீவிரவாத தாக்குதல் அல்ல என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது சுவீடன் வரலாற்றிலேயே மிக மோசமான தாக்குதல் என்று கூறப்படுகிறது.