சூடானில் உக்கிர மோதல் தொடரும் நிலையில் 800,000 பேர் வரை அங்கிருந்து வெளியேறலாம் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
போர் நிறுத்தத்தை மீறி தலைநகர் கார்டூமில் மீண்டும் குண்டுச் சத்தம் கேட்ட வண்ணம் உள்ளது. சூடானில் மூன்றாவது வாரமாக வன்முறை தொடர்கிறது.
அருகிலுள்ள எகிப்து, சாட், மத்திய ஆபிரிக்கக் குடியரசு ஆகிய நாடுகளுக்கு 10,000 க்கும் அதிகமானோர் தப்பிச் சென்றுவிட்டனர்.
சூடானில் இராணுவத்துக்கும், அதன் துணை இராணுவ ஆதரவுப் படைக்கும் இடையிலேயே மோதல் நீடிக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமானத் துறை அதிகாரி மார்ட்டின் கிரிபித்ஸ் நேற்று (2) பின்னேரம் சூடானை சென்றடைந்தார்.
சூடானில் வசிக்கும் மில்லியன் கணக்கானோருக்கு நிவாரண உதவி வழங்குவதற்கான வழிகளை அவர் ஆராய்வார். சூடானில் மனிதாபிமான நிலைமை மோசமடைந்து பேரழிவை எட்டுவதாக கிரிபித்ஸ் குறிப்பிட்டார்.










