சென்னை – பஞ்சாப் அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐ.பி.எல்.கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் சென்னை-பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

டெல்லிக்கு எதிரான தனது தொடக்க ஆட்டத்தில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதில் சென்னை நிர்ணயித்த 189 ஓட்டங்கள் இலக்கை டெல்லி தொடக்க வீரர்கள் ஷிகர் தவான், பிரித்வி ஷா இருவரும் அரைசதம் விளாசி எளிதில் எடுக்க வைத்து விட்டனர்.

சென்னையின் பந்துவீச்சு மிக மோசமாக இருந்தது. ‘ஸ்விங்’ தாக்குதலுக்கு பெயர் போன தீபக் சாஹர் அத்தகைய பந்துவீச்சை மறந்துவிட்டது போல் பந்து வீசினார். அத்துடன் தொடக்கத்தில் பவுன்சர்களை வீசி நெருக்கடி கொடுக்கவும் சென்னை பவுலர்கள் தவறினர்.

ஒரே ஆறுதல் நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பிய சுரேஷ் ரெய்னா அரைசதம் அடித்ததுதான். கேப்டன் டோனி ‘டக்-அவுட்’ ஆகி ஏமாற்றினார். வலுவான பஞ்சாப்புக்கு எதிராக அதுவும் வான்கடேவில் சாதிக்க வேண்டும் என்றால் குறைந்தது 200 ரன்கள் அவசியமாகும். பேட்ஸ்மேன்கள் ஒருங்கிணைந்து தெறிக்கவிட்டால் வெற்றிக்கணக்கை தொடங்கலாம்.

தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் நிகிடி தாமதமாக வந்து இன்னும் 7 நாள் தனிமைப்படுத்துதலை முடிக்காததால் இன்றைய ஆட்டத்திலும் விளையாடமாட்டார் என்று சென்னை பயிற்சியாளர் பிளமிங் ஏற்கனவே கூறியுள்ளார். இதனால் பந்துவீச்சில் மாற்றம் இருக்காது என்றே தெரிகிறது.

பஞ்சாப் கிங்ஸ் அணி தனது தொடக்க ஆட்டத்தில் ராஜஸ்தானை 4 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 221 ரன் குவித்த போதிலும் வெற்றிக்காக கடைசி பந்து வரை போராட வேண்டி இருந்தது. கேப்டன் லோகேஷ் ராகுல் (91 ரன்), தீபக் ஹூடா( 64 ரன்), கிறிஸ் கெய்ல்(40 ரன்) அசத்தினர். பேட்டிங்கில் வலிமையான பஞ்சாப் அணி இன்றைய ஆட்டத்திலும் ரன்வேட்டைக்கு தீவிரமாக உள்ளது. பஞ்சாப்பின் அதிரடி ஜாலத்துக்கு சென்னை அணி முட்டுக்கட்டை போடுமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

இவ்விரு அணிகளும் இதுவரை 23 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 14-ல் சென்னையும், 8-ல் பஞ்சாப்பும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டை ஆனது. கடந்த சீசனில் இரு லீக்கிலும் பஞ்சாப்பை சென்னை அணி துவம்சம் செய்தது நினைவு கூரத்தக்கது.  இன்றைய போட்டி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles