அரியாலை செம்மணிப் புதைகுழிக்குள் இருந்து, குழந்தைகளுக்குப் பாலூட்டும் போத்தலைப் போன்ற போத்தலொன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான அகழ்வுப் பணிகளின் பதினேழாம் நாளான நேற்றையதினமே அந்தப் போத்தல் அவதானிக்கப்பட்டுள்ளது. அதன் மீதான மேலதிக அகழ்வுப்பணிகள் இன்று தொடரவுள்ளன.










