செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டம் நடைபெறவுள்ளது.
வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் செம்மணிப் பகுதியில் நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கி அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.










