செம்மணி புதைகுழி அகழ்வு பணிக்கு உரிய நிதி ஒதுக்கீடு அவசியம்!

” செம்மணி புதைகுழியை பாரிய மனித புதை குழியாக பிரகடனப்படுத்த வேண்டும். அத்துடன், அகழ்வுப் பணி உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு உரிய நிதி ஒதுக்கப்படவும் வேண்டும் – என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நீதி அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

” செம்மணியில் பாரிய மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எலும்பு கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. பாரிய மனித புதைகுழிகள் என்று கூறும் தன்மையை அது கொண்டுள்ளது. எனினும், புதைகுழி உள்ள பகுதியில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.” – எனவும் கஜேந்திரகுமார் எம்.பி. கூறினார்.

அத்துடன், அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பதற்கும், சட்ட மருத்துவ அதிகாரி விடயங்களை செயற்படுத்துவதற்கும் போதுமானளவு நிதி இல்லை எனக் கூறப்படுகின்றது.
தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதி 20 நாட்களுக்குகூட போதாதென மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு நிதி இல்லாமல்போனால் அகழ்வுப் பணி நிறுத்தப்படக்கூடிய அச்சம் உள்ளது.

எனவே, குறித்த புதைகுழியை பாரிய மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த வேண்டும். அதற்கு தேவையான நிதியும் ஒதுக்கப்பட வேண்டும். அரசாங்கத்துக்கு தேவையேற்பட்டால் வெளிநாடுகளில் இருந்து நிதியைப் பெற்றுத்தர எம்மால் உதவ முடியும். உண்மை கண்டறியப்பட வேண்டும். சாட்சியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.” – என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. மேலும் தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles