ஹட்டன் – விக்டன் பாதையை புனரமைக்குமாறு கோரிக்கை

ஹட்டன் நகரிலிருந்து விக்டன் பகுதிக்குச் செல்லும் பிரதான பாதையின் சுமார் 6 கிலோமீற்றர் பகுதி நீண்டகாலமாக மோசமான நிலையில் காணப்படுவதால், அப்பகுதியில் வசிக்கும் சுமார் 5,000க்கும் மேற்பட்ட மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹட்டன் நகரிலிருந்து சுமார் 11 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள இந்தப் பாதையின் பல பகுதிகளில் பாரிய குழிகள், பாறைகள் மற்றும் கரடுமுரடான பாதைகள் காணப்படுவதுடன், தற்போது பாதையில் உள்ள பாலமொன்றும் சேதமடைந்த நிலையில் இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

சுமார் 20 ஆண்டுகளாக இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை எனவும், பல்வேறு சந்தர்ப்பங்களில் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்த போதிலும், எதிர்பார்த்த அளவில் பாதை அபிவிருத்தி செய்யப்படவில்லை எனவும் மக்கள் கூறுகின்றனர்.

இந்தப் பாதையைப் பயன்படுத்தி பிட்டவின் ஆரம்ப வித்தியாலயம், விக்டன் ஆரம்ப வித்தியாலயம் மற்றும் கணேஷா வித்தியாலயம் உள்ளிட்ட பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்கள் நாளாந்தம் பயணித்து வருகின்றனர்.

மேலும், உயர்தரக் கல்விக்காக வெளிப்பிரதேசங்களுக்குச் செல்லும் மாணவர்கள், ஆசிரியர்கள், அரச ஊழியர்கள், பட்டதாரிகள், தொழிலாளர்கள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்ட பலரும் இந்தப் பாதையையே பயன்படுத்தி வருகின்றனர்.

ருவன்புர, பிட்டவின், விக்டன் மேல்பிரிவு, பின்னோயா மேற்பிரிவு, பின்னோயா பி பிரிவு, விக்டன் கீழ்பிரிவு மற்றும் குருவத்தை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் இந்தப் பாதை நேரடியாக தொடர்புபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக அவசர சுகாதார நிலைமைகளில் நோயாளிகளை வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்லும் போது, மோசமான பாதை காரணமாக பயண நேரம் அதிகரிப்பதுடன், நோயாளிகளும் குடும்ப உறுப்பினர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதேபோன்று, மாணவர்கள் பாடசாலைகளுக்கும் பரீட்சைகளுக்கும் செல்லும் போதும், பொதுமக்கள் ஹட்டன் நகருக்குச் சென்று அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் அரச சேவைகளைப் பெறும் போதும் இந்தப் பாதையின் மோசமான நிலை பெரும் தடையாக இருப்பதாக கூறப்படுகிறது.

சேதமடைந்துள்ள பாலத்தையும், மோசமான நிலையில் காணப்படும் சுமார் 6 கிலோமீற்றர் பாதையையும் நிரந்தரமாக புனரமைத்து, பாதுகாப்பான போக்குவரத்துக்கு ஏற்ப மாற்றித் தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

பல ஆண்டுகளாக தீர்வுக்காக காத்திருக்கும் இந்த மக்களின் பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நிரந்தரத் தீர்வை வழங்க வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

“எங்கள் பாதை – எங்கள் உரிமை – எங்கள் எதிர்காலம்” என மக்கள் தமது கோரிக்கையை முன்வைக்கின்றனர்.

மலைவாஞ்ஞன்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles