செல்வச்சந்நிதி ஆலயத்தின் மஹோற்சவம் 27 ஆம் திகதி ஆரம்பம்

வரலாற்றுப் புகழ்பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் ஒகஸ்ட் 27ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

செப்டம்பர் 5ஆம் திகதி  காலை 9 மணிக்கு பூங்காவனமும், செப்டம்பர் 6ஆம் திகதி கைலாச வாகனமும், செப்டம்பர் 8ஆம் திகதி சப்பறத் திருவிழாவும், செப்டம்பர் 9ஆம் காலை 9 மணிக்கு தேர் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

செப்டம்பர் 10ம் திகதி காலை தீர்த்தத் திருவிழாவும் அன்று மாலை 6 மணிக்கு மௌனத் திருவிழாவும் செப்டம்பர் 11ம் திகதி பூக்காரர் பூசையும் நடைபெறவுள்ளது.

Related Articles

Latest Articles