இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகளைக்கொண்ட ஒருநாள் தொடரை 2 -1 என்ற அடிப்படையில் பங்களாதேஷ் அணி கைப்பற்றியுள்ளது.
இன்று நடைபெற்ற மூன்றாவதும் கடைசியுமான போட்டியில் பங்களாதேஷ் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
இதற்கமைய களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் சலக விக்கெட்டுகளையும் இழந்து 235 ஓட்டங்களைப் பெற்றது. ஜனித்
லியகனே 101 ஓட்டங்களைப் பெற்றார்.
பின்னர் 236 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 40.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இரு அணிகளுக்கும் இடையிலான ரி – 20 தொடரை இலங்கை அணி கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.