சொந்த வாகனங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு புதிய சட்டம்? தயாசிறி ஜயசேகரவின் புதிய யோசனை

நாட்டின் அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு முகங்கொடுத்து எரிபொருள் இறக்குமதியில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர புதிய யோசனையொன்றை சமர்ப்பித்துள்ளார்.

ஒரு வீதியில் பயணிக்கும் வாகனத்தில் குறைந்தது மூன்று பேராவது பயணிக்க வேண்டும் என தான் யோசனை ஒன்றை முன்வைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குருநாகலில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வீதிகளில் வாகனம் ஒன்று பயணித்தால், அந்த வாகனத்தில் மூன்று அல்லது நான்கு பேர் இருக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வர வேண்டும்.

ஒரு வாகனத்தில் ஒருவர் மாத்திரமே ஏறும் நிலை உள்ளது. இதனால் அதிக அளவு எரிபொருள் பயன்படுத்தப்படுகின்றது.

இந்த நேரத்தில் நாம் அனைவரும் வாகனங்களை இறக்குமதி செய்வது பற்றி மாத்திரம் யோசிக்காமல், இருக்கும் வாகனங்களை வீதிகளில் செலுத்துவதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும்.

Related Articles

Latest Articles