பதுளை- செங்கலடி வீதி 13ஆவது மைல்கல் பகுதியில் நேற்று இடம்பெற்ற கோர பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் பீ.சி.ஆர் சோதனையின் பின்னர் பதுளை மாகாண வைத்தியசாலையின் பிரேத அறையில் இருந்து இன்று (21) அதிகாலை 3.00 மணியளவில் அவர்களது உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து அவர்களது உடல்களை இன்றும் (21), நாளையும் (22) நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை அவர்களது குடும்ப உறவினர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
லுனுகலை 24ஆம் கட்டை பகுதியில் உயிரிழந்த இரு இஸ்லாமிய சகோதரிகளின் உடல்கள் இன்று (21) காலை நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. புகைப்படக் கலைஞர் டெனில் ஹரிஹரனின் உடல் ஹாலிஎல, குயின்ஸ்டவுனிலும், அடாவத்தை எல்ராடோவில் உயிரிழந்த கணவனும்,மனைவியுமான நோவா,மெடோனா தம்பதிகளின் உடல்கள் அடாவத்தை புனித அந்தோணியார் ஆலயத்தின் மையவாடியிலும் இன்று மாலை அடக்கம் செய்யப்பட்வுள்ளது.
ஆசிரியர் முரளிதரனின் உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படவுள்ளதுடன்,ஏனையோரின் உடல்களும் நாளை நல்லடக்கம் செய்யப்பட்டவுள்ளன. மீதும்பிட்டிய தொடக்கம் லுனுகலை வரையான பகுதிகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. வீதிகள் எங்கும் வெள்ளைக் கொடிகள் கட்டப்பட்டுள்ளன.எங்கும் சோகமயமாக காட்சியளிக்கின்றன.