சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவர் விஜே டயஸ் காலமானார்

சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவரும், மூத்த ட்ரொட்ஸ்கிசவாதியுமான விஜே டயஸ் 80 வயதில் நேற்று (27.07.2022) காலமானார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் வரும் 30ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு பொரளை பொது மயானத்தில் நடைபெற்று, பிற்பகல் 5 மணிக்கு நல்லுடல் தகனம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்னானரின் மறைவிற்கு குருவியின் ஆழ்ந்த இரங்கல்கள்.

இதுகுறித்து சோசலிச சமத்துவக் கட்சி ஊடக அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.

ஊடக அறிக்கை :

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), இன்று காலை, கட்சியின் தலைவரும் மூத்த ட்ரொட்ஸ்கிசவாதியுமான தோழர் விஜே டயஸ் அவர்களின் மறைவை மிகுந்த வருத்தத்துடன் அறிவிக்கிறது. அவர் அனைத்துலகக் குழுவின் தலைவர்களில் ஒருவராகவும், உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். அவருக்கு பாரிய மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் ஜூலை 27 உயிரிழந்துள்ளார். ஆகஸ்ட் 27 அவர் தனது 81வது பிறந்தநாளை கொண்டாடவிருந்தார்.

தோழர் விஜேயின் மரணம், குறிப்பாக சோசலிச சமத்துவக் கட்சிக்கும், ஒட்டுமொத்த நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கும் மற்றும் இலங்கை, தெற்காசியா மற்றும் சர்வதேச அளவில் உள்ள தொழிலாள வர்க்கத்திற்கும் பெரும் இழப்பாகும். அவர் இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் நலன்களை அடைப்படையாகக் கொண்ட, சர்வதேச சோசலிசத்தின் ட்ரொட்ஸ்கிச கொள்கைகளுக்காக, அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஒரு சளைக்காத போராளியாக இருந்தார்.

தோழர் விஜே, சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் (பு.க.க.) ஸ்தாபக உறுப்பினராக இருந்தார். 1964 இல் லங்கா சம சமாஜ கட்சி, பிரதமர் சிறிமா பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ அரசாங்கத்திற்குள் நுழைந்துகொண்ட போது, ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்காக 1968 இல் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஸ்தாபிக்கப்பட்டது.

அப்போது லங்கா சம சமாஜக் கட்சியின் இளம் உறுப்பினராக இருந்த தோழர் விஜே, காட்டிக்கொடுப்பை எதிர்த்த இளைஞர் குழுவில் ஒரு முன்னணி நபராக இருந்தார், மேலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வழிகாட்டுதலின் கீழ், தேவையான அரசியல் படிப்பினைகளைப் பெற்று, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் உறுதியான அரசியல் அடித்தளங்களை அமைத்தார்.

1987 டிசம்பரில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் ஸ்தாபக பொதுச் செயலாளர் கீர்த்தி பாலசூரியவின் துயரமான, அகால மரணத்திற்குப் பின்னர், தோழர் விஜே அந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்றிலிருந்து அவர் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தினதும் சோசலிச சமத்துவக் கட்சியினதும் பொதுச் செயலாளராக இருந்து வந்தார். கடந்த மே மாதம் சோசலிச சமத்துவக் கட்சியின் சமீபத்திய மாநாட்டில் அவர் கட்சியின் தலைவராக அமர்த்தப்பட்டார்.

தோழர் விஜே டயஸ், அரசியல் ஸ்தாபனத்தின் அனைத்துக் கட்சிகள், அதன் போலி-இடது அடிவருடிகள் மற்றும் தொழிற்சங்க ஏஜென்சிகளில் இருந்து, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்துக்காக போராடுவதில் கட்சிக்கு தலைமை தாங்கினார். அவரது வயது மற்றும் பலவீனமான உடல்நிலை ஒருபுறம் இருக்க, இராஜபக்ஷ மற்றும் விக்கிரமசிங்க அரசாங்கங்களுக்கும் அவற்றின் சிக்கன மற்றும் அடக்குமுறை திட்ட நிரலுக்கும் எதிரான தற்போதைய வெகுஜன எழுச்சிக்கு மத்தியில், தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற உழைப்பாளர்களுக்கு ஒரு புரட்சிகர சோசலிசப் பாதையை வகுப்பதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.

முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடியின் கூர்மையான வெளிப்பாடான இலங்கையில் நிலவும் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நெருக்கடியின் மத்தியில், அவரது இழப்பு குறிப்பாக உணரப்படுகிறது. எவ்வாறாயினும், மனிதகுலத்திற்கான சோசலிச எதிர்காலத்திற்காக அவர் முன்னெடுத்த வாழ்நாள் போராட்டத்தை இடைவிடாது முன்னெடுக்கின்ற, சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அரசியல் பணியில் அவரது சக்திவாய்ந்த அரசியல் மரபு வாழ்ந்துகொண்டிருக்கின்றது.

மறைந்த தோழர் விஜே டயஸின் பூதவுடல் பொரளை கனத்த வீதியில் உள்ள “ஜயரட்ன ரெஸ்பெக்ட் ஹோம்” மலர்சாலையில் ஜூலை 28 வியாழன் காலை 9 மணி முதல் ஜூலை 30 சனிக்கிழமை வரை இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து இறுதி ஊர்வலம் சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு பொரளை மயானத்திற்கு புறப்படும். பிற்பகல் 3 மணிக்கு அஞ்சலி கூட்டம் இடம்பெற்று மாலை 5 மணிக்கு தகனம் செய்யப்படும்.

இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள

தீபால் ஜயசேகர
பொதுச் செயலாளர் (சோசலிச சமத்துவக் கட்சி)

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles