ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 16 ஆம் திகதி டில்லி செல்லவுள்ள நிலையில், இந்திய பிரதமருடனான இரு தரப்பு சந்திப்பின்போது புதிய அரசாங்கத்தின் கொள்கைகள் பற்றி தெளிவுபடுத்தவுள்ளார் என தெரியவருகின்றது.
இந்திய விஜயத்தின் பிறகு ஜனவரி முற்பகுதியில் சீனாவுக்கும் பயணம் மேற்கொள்ள ஜனாதிபதி அநுர திட்டமிட்டுள்ளார்.
முதலீடுகளை ஈர்ப்பது, இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை மீள ஆரம்பிப்பது, கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இவ்விஜயத்தின்போது அவதானம் செலுத்தப்படவுள்ளது எனவும் தெரியவருகின்றது.
அத்துடன், டில்லி மற்றும் கொழும்புக்கிடையில் கைச்சாத்திடப்படவுள்ளபுரிந்துணர்வு உடன்படிக்கைகள் தொடர்பில் இந்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டுவருகின்றது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். குறிப்பாக மின்சக்தி துறையில் இந்திய முதலீடுகள் பற்றி கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது.










