மலையக மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்துவருகின்ற மலையகத் தொழிற்சங்க தியாகிகளை நினைவுகூருவதற்கு தினமொன்றைப் பிரகடனப்படுத்தக்கோரி நாடாளுமன்றத்தில் தனிநபர் பிரேரணையொன்று இன்று முன்வைக்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரால் முன்வைக்கப்பட்டுள்ள குறித்த பிரேரணையை, மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் வழிமொழிந்தார்.
ஜனவரி 10 ஆம் திகதியை மலையகத் தொழிற்சங்க தியாகிகள் தினமாக பிரகடனப்படுத்துமாறு வேலுகுமார் இப்பிரேரணை ஊடாக வேலுகுமார் எம்.பி. கோரிக்கை விடுத்தார்.
மலையக தொழிற்சங்க தியாகிகளை நினைவுகூருவதற்கு பொதுவானதொரு தினம் அவசியம் என்ற கோரிக்கை வலுத்துவந்த நிலையிலேயே, வேலுகுமார் எம்.பியால் இது தனிநபர் பிரேரணை முன்வைக்கப்பட்டது.
மலையக தொழிற்சங்க தியாகிகள் நினைவுகூரப்பட வேண்டிய அவசியத்துவத்தையும் வேலுகுமார் எம்.பி. சுட்டிக்காட்டி இருந்தார்.










