” அரசாங்க நிதி தொடர்பான குழுவின் புதிய தலைவராக என்னை நியமித்தமைக்காக நான் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இந்த நடவடிக்கைகளை சீர்குலைக்கும் நோக்குடன் நிதிக்குழுவில் நாம் கேள்வி எழுப்பவில்லை. சரியான பாதைக்கு திருப்பவே அவ்வாறு செய்தோம். இடைக்கால வரவு செலவுத் திட்ட அலுவலகத்தை நிறுவுவதற்கு ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்திடம் இருந்து நிதியைப் பெறுவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்.”
இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று (07) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் ஜனாதிபதி சந்திப்பை நடத்தினார். இதன்போதே ஹர்ஷ இவ்வாறு கூறினார்.










