“ ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் முழுமையான ஆதரவு வழங்கும்.” – என்று அச்சங்கத்தின் பொதுச்செயலாளரும், ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம், காணி உரிமை உட்பட முக்கிய சில விடயங்களைக் கருத்திற்கொண்டே ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் முடிவை எடுத்தாகவும் அவர் கூறினார்.
ஜனாதிபதியுடன் இன்று நடைபெற்ற சந்திப்பு திருப்திகரமாக அமைந்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.