இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவிப்பிரமாணம் செய்து இன்றுடன் ஈராண்டுகள் பூர்த்தியாகின்றது.

2019 இல் இதேநாளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அநுராதபுரம், ருவன்வெளிசாய விஹாரையில் கோட்டாபய ராஜபக்ச பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
‘சுபீட்சத்தின் நோக்கு’ எனும் கொள்கைத் திட்டத்தின்கீழ் தமது வேலைத்திட்டங்களை கடந்த ஈராண்டுகளில் அவர் முன்னெடுத்துவந்தார்.
