தற்போதைய அனைத்து நெருக்கடிகளுக்கும் காரணமானவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்
இந்த விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
ராஜபக்ச ஜனாதிபதியாக இருக்கும் வரை மக்களின் எதிர்பார்ப்புகளை எந்தவொரு அனைத்துக் கட்சியினாலும் அல்லது இடைக்கால அரசாங்கத்தினாலும் நிறைவேற்ற முடியாது. இன்று ஒரேயொரு தன்னிச்சையான முடிவினால் இரசாயன உரங்களை தடைசெய்து நாட்டின் ஒட்டுமொத்த விவசாய சமூகத்தையும் ஜனாதிபதி அழித்துள்ளார்.
தனது தன்னிச்சையான மோசடியான தீர்மானங்களுக்கு பொறுப்பேற்று ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்கு செல்ல வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதியை வைத்து உருவாக்கப்படும் எந்தவொரு அரசாங்கத்திற்கும் தேசிய மக்கள் சக்தி ஆதரவளிக்காது எனவும் ஜனாதிபதி பதவி விலகியதன் பின்னர் பாராளுமன்றத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் இணக்கப்பாட்டின் அடிப்படையில் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளத் தயார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
