ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி எதிர்வரும் 25 ஆம் திகதிக்குள் தேர்தல் ஆணைக்குழுவால் அறிவிக்கப்படவுள்ளது என தெரியவருகின்றது.
இதன்படி செப்டம்பர் 28 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியாக நிர்ணயிக்கப்படவுள்ளது என அறியமுடிகின்றது.
தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கிடையிலான கூட்டம் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளது என தெரியவருகின்றது.
அதேவேளை, அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும், தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று அடுத்தவாரம் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
