ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தமது கட்சியின் நிலைப்பாட்டை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எதிர்வரும் 25 ஆம் திகதி அறிவிக்கவுள்ளது என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
கட்சி தலைவரான மஹிந்த ராஜபக்சவால் அன்றைய தினம் விசேட உரை நிகழ்த்தப்படவுள்ளது எனவும், இதற்காக பிரமாண்ட நிகழ்வொன்று நடத்தப்படலாம் எனவும் தெரியவருகின்றது.
ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சியின் சார்பில் வேட்பாளர் ஒருவரை நியமிப்பதா அல்லது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதா என்பது தொடர்பில் மொட்டு கட்சி ஆராய்ந்துவருகின்றது.
தற்போதைய சூழ்நிலையில் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டிலேயே அக்கட்சி நகர்வதாக தெரியவருகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து குறைந்தபட்சம் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களையாவது
வளைத்துபோடுமாறு ரணிலிடம் மொட்டு கட்சி இடித்துரைத்துள்ளது. அதனால்தான் வேட்பாளரை அறிவிப்பதற்கு 25 ஆம் திகதிவரை மொட்டு கட்சி கால அவகாசம் எடுத்துள்ளது.










