உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். அவர் அந்த உறுதிமொழியை நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கின்றோம் – என்று பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இரு அறிக்கைகளையும் (அஸ்வில், இமாம்) நாம் ஏற்கவில்லை. முழுமையாகவும், வெளிப்படை தன்மையுடனும் விசாரணை இடம்பெறவில்லை என கருதுகின்றோம். இரகசியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை இருந்ததால்தான் அவை பற்றி நாம் கதைக்கவில்லை.
கட்டுவாபிட்டிய தேவாலயத்துக்கு ஜனாதிபதி சென்றிருந்தவேளை, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் எதையும் மூடிமறைக்க இடமளிக்கப்படமாட்டாது எனவும், நீதி பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி உறுதியளித்தார். அந்த உறுதிமொழியை அவர் நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கின்றோம்.
சாதாரண மக்களின் இதய துடிப்பை அறிந்தவராக இந்த ஜனாதிபதி இருப்பதுபோல் தெரிகின்றது. எனவே, அவர் செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது. பஸ் சாரதிமீது நம்பிக்கை வைக்காவிட்டால் பயணத்தை தொடர முடியுமா?” – என்றார்.










