ஜனாதிபதி மேற்குலக நாடுகளுக்கு விஜயம்

இன்று (17) அதிகாலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK 649 என்ற விமானத்தில்  சென்றுள்ளார்.

பிரித்தானியாவுக்கான விஜயம் ஒன்றிற்காகவும், பிரான்சின் பெரிஸில் நடைபெறவுள்ள புதிய உலகளாவிய நிதி உடன்படிக்கைக்கான மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவும் ஜனாதிபதி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரான்சில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார்.

“இன்று உலகம் எதிர்கொள்ளும் நெருக்கடியான சவால்களுக்கு தீர்வு காண்பது” என்ற தொனிப்பொருளில் ஜூன் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

 

உலக சமூகத்தை பாதித்துள்ள பல்வேறு நெருக்கடிகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்பது குறித்து இந்த மாநாட்டில் கவனம் செலுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

Related Articles

Latest Articles