புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக அமெரிக்கா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இன்றைய சவாலான காலங்களில், பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கும், ஜனநாயகம் மற்றும் பொறுப்புக்கூறலை நிலைநிறுத்துவதற்கும், இலங்கையர்களுக்கு நிலையான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கும் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குவது அவசியமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதி ரணிலி விக்கிரமசிங்கவின் பதவியேற்பின்னர் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இதனைக் குறப்பிட்டுள்ளார்.
கனடா
இதேவேளை இலங்கை மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளை தணிப்பதற்கு அவசர அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை நோக்கிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
இது இவ்வாறிருக்க இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான பேச்சுவார்த்தைகளை விரைவில் நிறைவு செய்ய முயற்சிப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீயேவா குறிப்பிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.










