ஜனாதிபதி ரணிலுக்கு முழு ஆதரவு! நாமல் ராஜபக்ச உறுதி!!

” ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எமது கட்சி முழுமையான ஆதரவை வழங்கும்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

அத்துடன், சர்வக்கட்சி அரசில் பதவிகளை ஏற்பது தொடர்பில் கட்சியே முடிவெடுக்கும், அந்த முடிவுக்கு அனைவரும் கட்டுப்படுவோம் எனவும் நாமல் ராஜபக்ச கூறினார்.

அத்துடன், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு எமது கட்சி பக்கபலமாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related Articles

Latest Articles