அடுத்த ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி வேட்பாளராக தன்னை களமிறக்குவதற்கு தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு தீர்மானித்துள்ளது என்று அக்கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
கட்சியின் நிறைவேற்றுக்குழுவால் நேற்று மாலையே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
‘ஹிரு’ தொலைக்காட்சியில் நேற்றிரவு ஒளிபரப்பான ‘சலகுண’ அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அநுர இந்த தகவலை வெளியிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச பெயரிடப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியும் தமது வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதியை அறிவித்துள்ளது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் குழப்ப நிலை இருக்கின்றது.










