ஜப்பானை கிலிகொள்ள வைத்த வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனை

வடகொரியா ஏவுகணை சோதனை நடத்துகிறது என்ற எச்சரிக்கை தகவலை தொடர்ந்து மக்களை உடனடியாக வெளியேறும்படி ஜப்பான் அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

ஜப்பானில் ஹொக்கைடோ மாகாணத்தின் அசஹிகவா நகரில், இன்று காலை நடுத்தர அல்லது நீண்ட தொலைவு சென்று தாக்க கூடிய வகையிலான ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்துகிறது என்ற எச்சரிக்கை தகவல் வெளியானது.

இதனை தொடர்ந்து, ஜப்பான் அரசு, ஹொக்கைடோ பகுதியில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறுங்கள், வெளியேறுங்கள் என அவசரப்படுத்தியது.

பொதுமக்கள் கட்டிடத்திற்கு அடியிலோ அல்லது நிலத்திற்கு அடியிலோ சென்று மறைவாக பதுங்கி கொள்ளுங்கள் என அறிவுறுத்தியது.

இதுபற்றி ஜப்பான் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில்,

இதுபற்றி ஜப்பான் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில், தகவலை சேகரிக்க மற்றும் ஆய்வு செய்ய முடிந்த வரையிலான முயற்சியில் ஈடுபட அர்ப்பணிப்புடன் செயல்படவும். பொதுமக்களுக்கு விரைவான, போதிய தகவலை வழங்கவும்விமானம், கப்பல் மற்றும் பிற பொருட்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும். வருங்காலத்தில் நிகழ கூடிய அனைத்து விசயங்களுக்கும் தயாராவது உள்பட முன்னெச்சரிக்கைக்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுங்கள் என தெரிவித்து உள்ளது.

எனினும், அந்த ஏவுகணை வடகொரியாவுக்கு கிழக்கே கடலில் விழுந்து இருக்க கூடும் என ஜப்பானின் கடலோர காவல் படை தெரிவித்து உள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் யசுகாஜூ ஹமடாவும் அந்த ஏவுகணை ஜப்பான் நிலப்பரப்பில் விழவில்லை என தெரிவித்து உள்ளார். தி கார்டியன் வெளியிட்ட செய்தியில், ஹொக்கைடோ தீவை ஏவுகணை தாக்க கூடிய சாத்தியம் இல்லை என உள்ளூர் அதிகாரிகளும் தெளிவுப்படுத்தி உள்ளனர் என தெரிவித்தது. இதனை தொடர்ந்து, எச்சரிக்கை விலக்கி கொள்ளப்பட்டு உள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles